கணிப்"பொறி"க்குள்
நீ வைத்த தேங்காய்காய் துண்டுதான்
உன் மின்னஞ்சல்….
விரும்பி நுழையும் எலியாய் நான்..!
"மயிலே"
என்றழைக்கலாம் என்றால் பார்த்ததில்லை…..
"குயிலே"
என்றழைக்கலாம் என்றால் பேசியதுமில்லை….
பின்பு எப்படித்தான் அழைப்பது....?
"மெயிலே"
என்றழைத்தால் கோபிக்க மாட்டாயே….?
அன்புக்கும் காமத்திற்கும் இடைப்பட்ட புள்ளியில்தான்
பூக்கிறது காதல் என்றார் வைரமுத்து….
அடடா….
அவருக்குத் தெரியாமல் போய் விட்டதே...!
உன் கணிணிக்கும்
என் கணிணிக்கும்
இடையில் கூட அது பூக்கலாம் என்று...!
என் கெஞ்சல்
என் கொஞ்சல்
எல்லாமே
மின்னஞ்சலோடு முடிந்து விடுமோ....?
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..?
உண்டே...!
என் GMAIL PASSWORD...!!
எல்லா மின்னஞ்சல்களிலும்
ATTACHMENT இருப்பதில்லை….
ஆனால் என் எல்லா மின்னஞ்சல்களிலும்
ஒரு "ATTACHMENT" இருப்பதை கவனித்தாயா..?
உரையாடல் அறையில் உரையாடல்..!
எப்போது
அறையில் உரையாடல்..?
பத்து விரல்களும்
பித்து பிடித்தது போல் ஆகி விட்டன…
சீக்கரம் வா...
பேச வேண்டும்…!
மனதிலிருக்கும் வார்த்தைகள்
எப்படியோ வழிதேடி
விரல் நுனிவரை
வந்து விடுகின்றன….
என் விரல்களுக்கு மட்டும்
நீ முதலில் பரிச்சயமாகி விட்டாயென்று
என் விழிகள்
என்னோடு சண்டையிடுகின்றன….
அவற்றிற்கும் ஒரு வாய்ப்பு கொடேன்..
வலையில் இருக்கிறேன்….
பிறகு பேசலாம் என்றேன்..!
நண்பன் கேட்டான்
யார் வலையில்?
வலைக்குள் நீ வந்தாலே
எளிதாய் அறிகிறேன்….
என் அறைக்குள் குளிர் அதிகமாகிறதே...!
நீ விடைபெறும் ஒவ்வொரு முறையும்
மரத்தின் கிளையில்
கடைசி இழையில்
தொங்கும் இலையின் நிலையில் நான்..!!
உன் விரல்களின்
விசாரிப்பு போதும்…
விழிகளால் எப்போது?
மின்னஞ்சல்
என்ற பெயர் சரிதான்..
உன் அஞ்சல் படிக்கும்போதே
மின்சாரம் பாய்கிறதே..!
பேராசைதான் ஒப்புக்கொள்கிறேன்….
வருகிற மின்னஞ்சல் எல்லாம்
உன்அஞ்சலாக இருக்கக்கூடாதா..?
2 comments:
Unn kavithai tamilukku naan adimai....veryyyyyyyyyy nice.........my friend also read ur kavithai....he said that those r wonderful vers.....very nice da.......i know to write marabu kavithai......i dont know to write like u.....really proud of u...
Minnanjal kavithai is very nice.....
Kalllakkal :)
Post a Comment