நீ பேசினால் மயங்குகிறேன் ....!
குரலை மயிலிறாகால்
தடவி அனுப்புகிறாயோ?
நூறு வார்த்தைகள் பேச வந்தவன்
வேறு வார்த்தைகள் பேசினேன்...
வார்த்தைகளா முக்கியம்..?
விழியின் வழியே
வெளியில் வழிகிறது
தளும்பித் தளும்பிக்
காதல்..!!
உன் இரு விழிநீரைத் துடைக்கும்
ஒரு விரல்
எனதாக வேண்டும்…
அன்பே..அன்பே..!
No comments:
Post a Comment