-
உன்னைச் சந்திக்க வரும் வழியில்
பூ வாங்கிக் கொள்ளலாம் என கிளம்பினேன்…
ஆனால் வரும் வழியெல்லாம் பூக்கள்..!
எதைப் பறிப்பது..?
-
காயங்கள் தருகிறாய்-அதற்கு
நியாயங்களும் சொல்கிறாய்...
ரணப்படுத்துகிறாய்-நீயே
குணப்படுத்துகிறாய்..
வலி தருகிறாய்-தீர
வழி சொல்கிறாய்--கேட்டால்
முள்ளும் மலரும் ஒரே செடியில் என்று சிரிக்கறாய்...!
-
"உன்னோடு பேசமாட்டேன்"
என்று சொல்லிவிட்டு
தாமதமாய் வந்ததற்கு காரணம் கேட்கிறாய்..
தீர்ப்பைச் சொல்லிவிட்டு
விசாரணையைத் துவக்குகிறாய்...
எங்கு நடக்கும் இந்த விசித்திர வழக்கு..?
-
என் வாழ்ககை ஒரு பாதை…
அதில் நீ மட்டும்தான் பயணி..!
நீ மட்டுமே பயணி..!
-
"நீ யாரையாவது காதலிக்கிறியா?"
"ஆமாம்..."
"யாரு..?"
"சொல்ல மாட்டேன்..."
நீதான் அது
என்று பின்னொரு நாளில் வெட்கத்தோடு
சொல்வாயென கற்பனை செய்கிறது
பாழாய் போன மனம்..!
-
"நீ யாரையாவது காதலிக்கிறியா?"
"ம்கூம்..!"
“நீ?”
"ச்சே ...ச்சே ..."
குறும்பாய் புன்னகைத்தது நம் காதல்..!
6 comments:
unnakula ippudi oru kalaignan irrukannu theriyama pochu. kalakura. andha 'matum than payani , nee matumae payani' is a sutle yet powerful thought. anubhavama!? :)
hey buddy,
thought you were some other anand. great job in poetry.
Thanks Guna...May i know whoz this???
ananth...really superb man...your poems are not imaginary...its real
Anand,
Ella Kavithaikal Nalla irunthathu...
But 'Payanam' kavithal romba romba Superb...
Un pathaiyil Avalin Payanam Inithe amaiya Valthukkal!!!
"நீ யாரையாவது காதலிக்கிறியா?"
"ம்கூம்..!"
“நீ?”
"ச்சே ...ச்சே ..."
குறும்பாய் புன்னகைத்தது நம் காதல்..!
Pattaya Kelappitinga...
Post a Comment